மக்காச் சோள பணியாரம் செய்யும் முறை
#Recipe
#Cooking
#Food
#2023
#Tamil Food
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
1/4 கிலோ மக்காச்சோளம்
1 கப் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் வெந்தயம்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
- மக்காச்சோளத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.உளுந்தையும் சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- வழக்கமாக அரைப்பது போல் உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. மக்காச்சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.
- அரைத்தஉளுந்து மாவுடன் மக்காச்சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிட வேண்டும். மறுநாள் நேரம் புளித்து தயாராக இருக்கும்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, மக்காச்சோள பணியார மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்ற ஊற்றி, சூடானதும் மாவை பணியாரங்களாக ஊற்ற வேண்டும்.
- ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்க வேண்டும். சுவையான மசாலா சேர்த்த மக்காச் சோள பணியாரம் தயார்.