தீபாவளி இனிப்பு விசேஷம் - சீதாப்பழ பாசுந்தி

#Festival #Cooking #Lanka4 #லங்கா4 #Sweets #சமையல்
Mugunthan Mugunthan
5 months ago
தீபாவளி இனிப்பு விசேஷம் - சீதாப்பழ பாசுந்தி

வரும் தீபாவளிக்கு சாதாரண இனிப்பு செய்வதற்கு பதிலாக, சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சீதாப்பழ பாசுந்தி செய்து முயற்சித்து பாருங்கள்.

 தேவையான பொருட்கள்

  1.  விதை நீக்கிய சீதாப்பழம் 1 கோப்பை
  2.  கொழுப்பு நிறைந்த பால் ஒரு லீற்றர்
  3.  சர்க்கரை 5 தேக்கரண்டி
  4.  ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
  5.  பாதம் 2 தேக்கரண்டி
  6.  பிஸ்தா 2 தேக்கரண்டி
images/content-image/1699371018.jpg

செய்முறை

  •  முதலில் கடாயில் பால் ஊற்றி மிதமான நெருப்பில் காய்ச்ச வேண்டும்.
  •  பால் நன்றாக சுண்டும் வரை தொடர்ச்சியாக கிளறி கொண்டு இருக்க வேண்டும்
  •  பின் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மிதமான நெருப்பில் நன்கு கலக்க வேண்டும்
  •  பின் அடுப்பை அணைத்துவிட்டு கலவையை பெரிய கோப்பையொன்றிற்குள் மாற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும்
  •  சீதாப்பழம் பாசுந்தி குளிர் நிலைக்கு வந்ததும், பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து கலக்க வேண்டும்.
  •  இறுதியில் அரைமணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டு, வீட்டிலிருப்பவர்களுக்கு பரிமாறலாம்.