பிரான்ஸில் காணாமல் போன இரண்டரை வயது எலிமி குறித்து உறவினர் வீடுகளில் தேடுதல்

#France #Lanka4 #தேடல் #லங்கா4 #சிறுவர் #Missing #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸில் காணாமல் போன இரண்டரை வயது எலிமி குறித்து உறவினர் வீடுகளில் தேடுதல்

எலிமி எனும் இரண்டரை வயதுச் சிறுவன் காணாமல் போன சம்பவம் அறிந்ததே.

 Haut-Vernet எனும் சிறு மலைக்கிராமத்தில் கடந்த ஜூலை மாத ஆரம்பத்தில் (ஜூலை 7) சிறுஅன் காணாமல் போயிருந்தான். சிறுவனைத் தேடும் பணி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

 இந்நிலையில், நேற்று திங்கட்கிழமமை காலை நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் தேடுதல் பணி இடம்பெற்றது. 50 ஜொந்தாமினர் இந்த தேடுதலை மேற்கொண்டிருந்தனர். முன்னதாக காடுகளிலும் மலைகளிலும் தேடுதல் பணி இடம்பெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் சிறுவனின் உறவிகள் வீடுகள் பலவற்றில் தேடுதல் பணி இடம்பெற்றது.

images/content-image/1699430787.jpg

 குறிப்பாக Vernet (Alpes-de-Haute-Provence) நகரில் உள்ள சிறுவனின் தாத்தா முறை உறவினரது வீட்டில் ஜொந்தாமினர் தேடுதல் நடத்தினர். குறித்த வீட்டின் அருகே சிறுவனைக் கட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே அங்கு தேடப்பட்டது. 

அதேவேளை அருகில் உள்ள பல வீடுகளிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. தொலைபேசிகள், கணனிகள் உள்ளிட்ட சாதனங்கள் சோதனையிடப்பட்டது. ஆனால் இந்த சோதனைகளில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அறிய முடிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4