அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
#Death
#Police
#Hospital
#America
#world_news
#GunShoot
Prasu
2 years ago
அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்தபடி ஓடினர்.
அவர்கள் அங்குள்ள அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.
அவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.