ரூ.8 கோடிக்கு ஏலத்திற்கு வரும் அமெரிக்க நடிகரின் ஆபரணம்

#Actor #America #world_news #Dollar #Jewelry #Auction
Prasu
1 year ago
ரூ.8 கோடிக்கு ஏலத்திற்கு வரும் அமெரிக்க நடிகரின் ஆபரணம்

பிரபல அமெரிக்க பாடகரும், நடிகருமான எல்விஸ் பிரெஸ்லி 'ராக் அண்ட் ரோலின் மன்னன்' என போற்றப்பட்டவர். 

1954-ம் ஆண்டு இசை துறைக்குள் நுழைந்த இவர் ராக் அண்ட் ரோல் இசையின் தொடக்க வடிவமான 'ராக்கபிலிட்டி' இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர்களுள் ஒருவராக இருந்தார்.

1970-ம் ஆண்டு மறைந்த இவர் அணிந்திருந்த சிங்க நக நெக்லஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. மேடை நிகழ்ச்சிகள் மற்றும் எல்விஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது அவர் அந்த நெக்லசை அணிந்து செல்வது வழக்கம். 1975-ம் ஆண்டு முகமது அலியை சந்தித்த போது இந்த நெக்லசை அணிந்திருந்தார்.

அவரது இந்த நெக்லஸ் எல்விஸ் பிரெஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நெக்லஸ் ஏலத்திற்கு செல்கிறது. இந்த நெக்லஸ் ஒரு மில்லியன் டாலர் வரை ஏலம் போகும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!