ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் : 17 பணயக் கைதிகள் விடுவிப்பு!

#SriLanka #Israel #Lanka4 #Tamilnews
Dhushanthini K
1 year ago
ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் :  17 பணயக் கைதிகள் விடுவிப்பு!

காஸா பகுதியில் நடந்து வரும் போர்நிறுத்தத்தின் கீழ் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் மற்றொரு குழுவை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.  

அதன்படி 13 இஸ்ரேலியர்களையும் நான்கு தாய்லாந்து நாட்டவர்களையும் விடுவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஹமாஸ் போராளிகள் பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்த பின்னர், அவர்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  

இதேவேளை, தமது பிடியில் உள்ள பலஸ்தீனப் பிணைக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான நான்கு நாள் யுத்த நிறுத்தத்தின் இரண்டாம் நாளான நேற்று (25) இந்த பணயக்கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!