காசாவில் பாதுகாப்பு படையை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்

#PrimeMinister #Israel #War #Soldiers #Military #Hamas #Gaza #Netanyahu
Prasu
1 year ago
காசாவில் பாதுகாப்பு படையை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. 

இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும், பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று காசா பகுதியில் பாதுகாப்புப் படையினரை சந்தித்து பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தளபதிகளுடன் பேசினார் என்றும், பாதுகாப்பு தொடர்பான விளக்கத்தைப் பெற்றார் என்று அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில்"எதுவும் எங்களைத் தடுக்காது. போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான பலம், சக்தி, விருப்பம் மற்றும் உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதையே நாங்கள் செய்வோம்," என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!