பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய டைனோசர் இன கால்தடம்

#world_news #Brazil #Research #Dinosaur #Animal #footprint
Prasu
1 year ago
பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய டைனோசர் இன கால்தடம்

பல கோடி நூறு ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தது. அதன் கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் பிரேசிலில் கால்தடங்கள் மூலம் புதிய டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலின் அரராகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கால் தடங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். 

இதில் பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய டைனோசர் இனம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இது 60 முதல் 90 செ.மீ. (2 முதல் 3 அடி) உயரம் கொண்ட ஒரு சிறிய மாமிச விலங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பர்லோவிச்னஸ் ரேபிடஸ் ஒரு சிறிய, வேகமான மாமிச உண்ணி ஆகும். இது சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!