இஸ்ரேலுக்கான விமானச் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திய பிரபல நிறுவனம்
#Flight
#Airport
#Israel
#War
#suspend
#Hamas
#cancelled
Prasu
1 year ago

இஸ்ரேலுக்கான விமானச் செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று எமிரேட்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலின் தற்போதைய இராணுவ நிலைமை காரணமாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து விமானங்கள் திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி இயங்கவில்லை. எனவே மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



