காஸாவில் தொடரும் இடைக்கால போர்நிறுத்தம்!

#world_news #Israel #War #Gaza
Mayoorikka
11 months ago
காஸாவில் தொடரும் இடைக்கால போர்நிறுத்தம்!

ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. 

கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.

 இதன் பயனாக கடந்த வெள்ளிக்கிழமை (24) காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. 

images/content-image/2023/1701326066.jpg

ஒரு பிணைக்கைதிக்கு மூன்று பலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது. முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. 

நேற்று 6-வது நாளாக ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர்.

 அதற்குப் பதிலாக இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுவித்தது. வியாழக்கிழமை (30) காலையுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. 

இதனால் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடருமா? போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது. இந் நிலையில் “ராணுவ நடவடிக்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது அப்படியே தொடரும். 

வரையறைக்கு உட்பட்டு மத்தியஸ்தரர்கள் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தொடருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!