உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தைகளில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,111 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்து வருவதும், அடுத்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை மையமாகக் கொண்ட புவி-அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க டொலரின் மதிப்பு மற்ற ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக சுமார் 3.2% குறைந்துள்ளது. இதுவே தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.