அதிக குழந்தைகள் பெற்று கொள்ள வடகொரிய ஜனாதிபதி வலியுறுத்தல்

#Women #world_news #NorthKorea #President #population #baby #Pregnant
Prasu
11 months ago
அதிக குழந்தைகள் பெற்று கொள்ள வடகொரிய ஜனாதிபதி வலியுறுத்தல்

கடுமையான மற்றும் வித்தியாசமான சட்ட விதிகளை கொண்ட நாடாக வட கொரியா அறியப்படுகிறது. இந்த நாட்டினை கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போன்று ஆட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

மிகச்சிறிய நாடான வடகொரியாவில் மக்கள் தொகை 2.6 கோடி மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதன் காரணமாக அந்நாட்டில் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கூறி மேடையிலேயே கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழதார். இது குறித்து பேசிய அவர், "நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 

இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். இது தான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பதோடு, குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். 

அவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!