சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் ஒப்பந்தத்தில் ருவாண்டோவுடன் கைச்சாத்திட்ட பிரித்தானியா!

#UnitedKingdom #Refugee #Agreement
PriyaRam
11 months ago
சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் ஒப்பந்தத்தில் ருவாண்டோவுடன் கைச்சாத்திட்ட பிரித்தானியா!

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடனான வலுவான கருத்து வேறுபாடுகளை மேற்கோள் காட்டி பிரித்தானியகுடிவரவு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ரொபர்ட் ஜென்ரிக் அறிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் அவசரகால சட்ட வரைவு போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

images/content-image/2023/12/1701928183.jpg

அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்கு முன்னர் படகுகள் மூலம் குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் இறுதி வாய்ப்புகளில் ஒன்றாக இதனை தான் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சரின் இராஜினாமா ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் நிலைமையை தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்றும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக வருபவர்களை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக நேற்று ருவாண்டாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!