மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?
#world_news
#Earthquake
#Mexico
#tsunami
Mayoorikka
2 years ago
மெக்சிகோவின் தலைநகரில் நேற்றைய தினம் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உட்பட மத்திய மெக்சிகோவின் பெரும்பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
தொடர்ந்து தலைநகரம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையையும் அந்நாட்டின் தேசிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து மெக்சிகோ நகரிலுள்ள கட்டிடங்கள் குலுங்கின.
இதனையடுத்து கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், இதுவரையில் அங்கு எவ்வித சேதமும் பதிவாகவில்லை.