காசா தாக்குதலில் இஸ்ரேல் மந்திரியின் மகன் பலி
#Death
#world_news
#Minister
#Israel
#War
#Hamas
#Gaza
Prasu
2 years ago
இஸ்ரேல் போர் அவையின் மந்திரியும் முன்னாள் ராணுவ தலைமை தளபதியுமான காடி ஐசன்கோட்டின் மகன், காசா போர் முனையில் உயிரிழந்துள்ளார்.
ஐசன்கோட் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கட்சியின் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆகிய இருவரும் அக்.7 தாக்குதல் பிறகு பிரதமர் நெதன்யாகு அமைத்த போர் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினர்.
கல் மெயிர் ஐசன்கோட் எதற்காக இறந்தாரோ அந்தப் புனித காரணத்துக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்.இவரது மகன் கெல் மெயிர் ஐசன்கோட் (25) காசா போர் முனையில் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இது குறித்து பென்னி காண்ட்ஸ் கூறுகையில்,"காடி மற்றும் அவரது குடும்பத்துக்கு இஸ்ரேல் சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். கெல் மெயிர் ஐசன்கோட் எதற்காக இறந்தாரோ அந்தப் புனித காரணத்துக்காக நாம் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.