சோமாலிய அதிபரின் மகனுக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சோமாலிய அதிபரின் மகனுக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிப்பு!

சோமாலிய அதிபரின் மகனுக்கு துருக்கி சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. 

சோமாலிய ஜனாதிபதியின் மகன் கார் விபத்தை ஏற்படுத்தி நபர் ஒருவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவர் துர்குவில் உள்ள ஸ்தான்புல் நகரில் காரை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அதிபரின் மகனுக்கு துருக்கி பயணத் தடை விதித்த போதிலும், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் சோமாலிய ஜனாதிபதி ஹசன் ஷேக் மொஹமட்டின் மகன் மொஹமட் ஹசன் ஷேக் மொஹமட் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!