அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Australia #world_news #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதியாக குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.  

அதன்படி 2025 ஜூன் மாதத்திற்குள் 250,000 குடியேற்றவாசிகள் மட்டுமே நாட்டிற்கு வர வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  

கடந்த சில ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுகளில் இருந்து  குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது, இதன் காரணமாக, நாட்டில் வீட்டுப் பிரச்சனை அதிகரித்தது. 

இந்நிலையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிளாரி ஓ'நீல் தனது 10 ஆண்டு குடியேற்றத் திட்டத்தை இன்று (11.120 வெளியிட்டார். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 510,000 பேர் வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!