எல்நினோ தாக்கம் - தென்படும் பராக்கிரம சமுத்திரத்திற்குள் வரையப்பட்ட ஓவியங்கள்

#SriLanka #Polonnaruwa #El Nino #PARAKRAMA SAMUDRA
Thamilini
51 minutes ago
எல்நினோ தாக்கம் - தென்படும் பராக்கிரம சமுத்திரத்திற்குள் வரையப்பட்ட ஓவியங்கள்

 எல் நினோ நிலைமைகளால் ஏற்பட்ட கடுமையான வறண்ட வானிலை பொலன்னருவ மாவட்டத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 அதிக வெப்பநிலைக்கு மத்தியில், பொலன்னருவவில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு சுமார் 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளது. 

 நீர் மட்டம் குறைந்ததால், பராக்கிரம சமுத்திரத்திற்குள் மன்னர் பராக்கிரமபாகுவால் கோடைக்கால ஓய்விடமாக கட்டப்பட்டதாக நம்பப்படும் வரலாற்று சிறப்புமிக்க சீதா மாளிகையின் எச்சங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. 

ஆதேநேரம் அருகிலுள்ள பல சிறிய தீவுகளும் வெளிப்பட்டுள்ளன. 

இதற்கிடையே  பராக்கிரம சமுத்திரயத்தின் எக்க ஏல மதகைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடப்பதோடு, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 நீர்மட்டம் குறைந்ததால் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கலாம் என்றும், அதுவே மீன்களின் இறப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4