உக்ரைன் உலகளாவிய ஜனநாயகத்திற்காக போராடுகிறது - செலன்ஸ்கி!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
11 months ago
உக்ரைன் உலகளாவிய ஜனநாயகத்திற்காக போராடுகிறது - செலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (12.12) அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தின்போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஜயத்திற்கு முன்னர், உக்ரேனிய ஜனாதிபதி உக்ரேனுக்கு மேலும் இராணுவ உதவி தேவை என்று குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்ட வேண்டுகோளை விடுத்தார். 

இராணுவ அதிகாரிகள் குழுவில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி, உக்ரைன் சுதந்திரத்திற்காக மட்டுமன்றி உலகளாவிய ஜனநாயகத்துக்காகவும் போராடுவதாக குறிப்பிட்டுள்ளார். 

உக்ரைனுக்கு 60 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் காங்கிரஸிடம் கேட்டுக் கொண்டார்.  ஆனால் அந்த கோரிக்கைகள் பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டன.  

உக்ரைன் ஜனாதிபதியும் இந்த விஜயத்தின் போது சபாநாயகர் மைக் ஜோன்சனைச் சந்தித்து இராணுவ உதவிக்கான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!