அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பில் ட்ரம்ப் முதலிடம்
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
இதற்காக குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் டிரம்ப் தனக்கான ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் உள்ளார்.
அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா மாகாண முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.
இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு இருப்பது தொடர்பாக தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
மாகாண வாரியாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 61 சதவீத குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.