சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்திற்கு ஆதரவாக சட்டமியற்றுபவர்கள் வாக்களிப்பு!
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசின் திட்டத்திற்கு ஆதரவாக அந்நாட்டின் சட்டமியற்றுபவர்கள்வாக்களித்துள்ளனர்.
இது மனித உரிமைக் குழுக்களைக் கோபப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அரசாங்கத்தின் ருவாண்டா மசோதாவை கொள்கையளவில் அங்கீகரிக்க வாக்களித்துள்ளதுடன், எதிர்கால சவால்கள் குறித்து ஆராயுமாறும் தெரிவித்துள்ளது.
இதன் நடவடிக்கையானது பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கத்திற்கு வலுசேர்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கமானது நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியது. அதாவது புலம்பெயர்வோரை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்திற்கு பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக நின்றனர்.
இந்நிலையில், தற்போதைய வாக்களிப்பு அவருடைய அரசாங்கத்திற்கு வலு சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரிட்டனை அடையும் புலம்பெயர்ந்தோரை படகுகளில் ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டமானது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.