150 மில்லியன் ஆண்டு பழமைவாய்ந்த விலங்கின் மண்டையோடு கண்டுப்பிடிப்பு

#world_news #Britain #Research #Dinosaur #Old #Skull
Prasu
11 months ago
150 மில்லியன் ஆண்டு பழமைவாய்ந்த விலங்கின் மண்டையோடு கண்டுப்பிடிப்பு

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் ப்ளியோசொரஸ் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய கடல் விலங்கின் மண்டை ஓட்டை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

இது டோர்செட்டின் ஜுராசிக் கடற்கரையின் பாறைகளில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மீட்டர் நீளமுள்ள புதைபடிவமானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளில் மிகச் சரியான மாதிரியாகக் கருதப்படுகிறது.

 10 முதல் 12 மீட்டர் வரையிலான அளவு கொண்ட இந்த ப்ளையோசர் அதிக வேகத்தில் நீந்தக்கூடிய மிகக் கொடூரமான வேட்டையாடும் விலங்குகளில் ஒன்றாகும் என்று விலங்கியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!