ஏதென்ஸில் வணிக வளாகம் அருகே குண்டுவெடிப்பு - உயிர் சேதமில்லை
#Hospital
#world_news
#Attack
#BombBlast
#Rescue
#Greece
#Athens
Prasu
2 years ago
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதேன்ஸ் அருகே பிரயஸ் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் அருகே வணிக வளாகம் உள்ளது.
இந்நிலையில், இந்த வணிக வளாகம் அருகே இன்று அதிகாலை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் வணிக வளாகத்தில் சேதம் ஏற்பட்டது.
மேலும், வணிக வளாகத்தின் கண்ணாடிகள் உடைந்தன. அதிகாலை நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படவில்லை, யாருக்கும் எந்த வித பாதிப்பும், காயமும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.