உக்ரைன் போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய படையினரின் எண்ணிக்கை அறிவிப்பு
உக்ரைன் உடனான போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய படையினரின் எண்ணிக்கை 315,000 பேர் எனவும் இது மொத்தப் படையினரின் எண்ணிக்கையில் 90 வீதம் எனவும் அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தப் போரில் ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த மேற்கத்திய மதிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் உக்ரேனிய இழப்புகளை எப்போதும் குறைத்து மதிப்பிடுவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் 360,000 படையினருடன் ரஷ்யா உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
அப்போதிருந்து, 315,000 ரஷ்ய துருப்புக்கள் அல்லது மொத்த வீரர்களில் சுமார் 87 வீதம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.