03 பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம் : திரளாக கூடிய மக்கள்!
03 பணயக் கைதிகள் இஸ்ரேலிய இராணுவத்தால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பணயக்கைதிகளின் சதுக்கம் எனச் சொல்லப்படுகின்ற டெல் அவிவ் கலை அருங்காட்சியகத்திற்கு வெளியே மக்கள் கூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸாவில் 100க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 70 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட பணயக் கைதிகளின் முகங்களைக் கொண்ட சுவரொட்டிகள் விளக்குக் கம்பங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அவர்களை விடுவிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். எவ்வாறாயினும், இராணுவ அழுத்தம் மட்டுமே அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒரே வழி என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் மூன்று பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் - இஸ்ரேலிய இராணுவத்தால் "துயர்கரமானது" என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது அழுத்தத்தை கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.