கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயார் நிலையில் வைத்துள்ள ரஷ்யா!
#SriLanka
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள கலுகா பிராந்தியத்தில் உள்ள கோசெல்ஸ்க் தளத்தில் ரஷ்ய ராக்கெட் படைகள் புதிய Yars கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயார் நிலையில் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
23-மீட்டர் நீளமுள்ள RS-24 (Yars) ஏவுகணையானது, பல்வேறு இலக்குகளில் பல அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் திறன் கொண்டது.
இந்நிலையில் "கோசெல்ஸ்கி வளாகத்தில், மூலோபாய ஏவுகணைப் படைகள் Yars கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒரு சிலோ லாஞ்சரில் ஏற்றியது" என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.இது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.