சீனாவில் பெண் கொலையாளிக்கு மரண தண்டனை
சீனாவை சேர்ந்த பெண் சீரியல் கில்லர் லாவோ ராங்சி (வயது 49). 1996 முதல் 1999 வரையிலான 3 ஆண்டுகளில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் 7 பேர் கொடூர கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக போலீசார் அவரை தேடி வந்தனர்.
20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரில் வாட்ச் விற்பனையில் ஈடுபட்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
அவருடைய அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றிய வழக்கு விசாரணையில், லாவோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் நான்சங் பகுதியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ததில், அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி அந்த கோர்ட்டு வெளியிட்ட செய்தியில், சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் பெறப்பட்டதும் திங்கட்கிழமை காலையில் லாவோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என தெரிவித்து உள்ளது.
அவருடைய மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு முன் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என லாவோ விரும்பியுள்ளார். அந்த விருப்பம் நிறைவேற்றப்பட்டது.