பொருளாதார சீரழிவிற்கு இந்தியா காரணம் அல்ல - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுடன் நவாஸ் ஷெரீப் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: பிரதமராக நான் பதவி வகித்த 3 ஆட்சிக்காலங்களிலும் ராணுவத்தினர் தலையீட்டால் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் இந்தளவுக்கு சீரழிய காரணம் இந்தியா அல்ல. ஏன் அமெரிக்காவோ, ஆப்கன் கூடஅல்ல.
நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டோம். 2018-ல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு, தங்களது சொல்பேச்சு கேட்கும் அரசை, ராணுவம் கொண்டு வந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.