கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலின் மாலுமி மீட்பு
#India
#Hospital
#Rescue
#SaudiArabia
#Ship
#NavyOfficers
#Kidnap
Prasu
2 years ago
அரேபியன் கடல் பகுதியில் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட கப்பலில் மாலுமி ஒருவர் காயம் அடைந்தார்.
அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து அந்த மாலுமியை கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர். இதற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் உதவியது.
விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது. கடத்தப்பட்ட கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.