தாய்லாந்தில் புதிய துப்பாக்கி உரிமம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்
#Murder
#world_news
#government
#Weapons
#Thailand
#suspend
#Case
#licences
Prasu
2 years ago
தாய்லாந்தில் புதிய துப்பாக்கி உரிமம் வழங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், கொடிய துப்பாக்கி சம்பவங்களைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து இராஜ்யத்தில் விவாதம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபரில் பாங்காக் ஷாப்பிங் மாலில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஓராண்டுக்கு முன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 36 பேரை சுட்டுக் கொன்றார்.
இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து துப்பாக்கி உரிமம் வழங்குவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.