சுவிஸில் அடுத்த ஆண்டில் இருந்து 7.7% ஆக இருக்கும் விற்பனை வரி 8.1% ஆக அதிகரிக்கிறது!
சுவிற்சர்லாந்தில் வரும் ஜனவரி மாதம் (01.01.2024) முதல் மதிப்பு கூட்டு (MWS) வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என சுவிஸின் நடுவன் அரசும், நிதி அமைச்சும் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் தற்போதுள்ள நிலையான கட்டணம் 7.7% இருந்து 8.1% ஆகவும், ஜனவரி முதல் அதிகரிக்கவுள்ளது. குறைக்கப்பட்ட விகிதம் 2.5% க்கு பதிலாக 2.6% ஆகவும், தங்குமிடத்திற்கான சிறப்பு கட்டணம் 3.8% ஆகவும் நடைமுறைக்கு வரவுள்ளதாக அரச அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சிறிய வரி மாற்றம் மக்களுக்கு பெரிதும் பாதிக்காவிட்டாலும், அரசுக்கு பெரும் வருமானத்தை கொண்டுவரும் எனவும், இது கொவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் மக்களுக்கு அதிக மானியங்கள் வழங்கப்பட்டதை ஈடு செய்ய உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் சுவிஸ் நாட்டில் 2.9% வீதமாக இருக்கும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 1.5 வீதத்தில் இருந்து 2.0% வரை அதிகரிக்கப்போவதாகவும், இதன் பின்னர் வீடுகள் வாங்குவோர் தொகை அதிகரிக்கும் என்றும் நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீடுகள் காணிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இப்படியான புதிய சட்டதிட்டங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட செய்திகளை அறிய #LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள். பிடித்தவர்கள் இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிரவும்.
இந்த செய்தி சம்பந்தமாக மேலதிக தகவல்களை பார்வையிடுவதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.