காசா மக்களுக்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசா பகுதிக்கு உதவி கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக பல நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புச் சபை தனது உறுப்பினர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் உடனடியாக யுத்த நிறுத்தம் எதுவும் கோரப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் 15 கவுன்சில் உறுப்பினர்களில் 13 பேர் அமெரிக்கா கொண்டு வந்த முந்தைய தீர்மானத்தை ஆதரித்தனர், ஆனால் அமெரிக்கா அதை வீட்டோ செய்தது மற்றும் ஐக்கிய இராச்சியம் வாக்களிப்பதில் இருந்து விலகியிருந்தது.
இதற்கிடையில்இஸ்ரேலிய தாக்குதல்களில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் ஆளும் காஸா அரசாங்கம் தெரிவித்துள்ளது.