ஹிட்லரின் சித்தாந்தத்தை பயன்படுத்துகிறாரா ட்ரம்ப்? : ஊடகவியலாளர்கள் கேள்வி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Trump
Thamilini
2 years ago
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் குடியேற்றத்தின் தாக்கம் குறித்து புலம்புவதற்காக "இரத்தத்தை விஷமாக்குதல்" என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை ஆதரித்துள்ளார்.
சமீபத்திய உரைகள் மற்றும் நேர்காணல்களில் இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திய டிரம்ப், நாஜி தலைவரின் இனவெறி சித்தாந்தத்தை எதிரொலிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
நேர்காணல் ஒன்றின்போது ட்ரம்ப் இந்த சொற்தொடர்களை பயன்படுத்திய நிலையில், அவர் ஹிட்லரைப் பயன்படுத்துகிறாரா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், இல்லை என்றும், ஹிட்லர் இதை பயன்படுத்தி இருப்பது தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
தனது வார்த்தைகளுக்குப் பின்னால் இனவாத நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.