200இற்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளை கைது செய்த இஸ்ரேல்!
கடந்த ஒரு வாரத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களை சேர்ந்த 200 பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள். இஸ்ரேலுக்குத் தேவையான பல முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவர்கள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சில சந்தேகநபர்கள் பொதுமக்கள் மத்தியில் மறைந்திருந்து தானாக முன்வந்து சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹமாஸை ஒழிப்பதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததில் இருந்து சுமார் 700 பாலஸ்தீனிய போராளிகளை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
இதற்கிடையில்பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் கொன்று வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது.
எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.