பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் இந்துப் பெண்!
#SriLanka
#Election
#Pakistan
#Lanka4
#sri lanka tamil news
#lanka4Media
#lanka4_news
#lanka4news
#lanka4.com
Dhushanthini K
11 months ago
பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர் அங்கு நடைபெறும் பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடவுள்ளார்.
கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் அவர் வேட்பு மனு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 16வது தேசிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிப்ரவரி 8, 2024 அன்று பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சவீரா பிரகாஷ், புனர் மாவட்டத்தில் உள்ள பிகே-25 பொது இருக்கைக்கான வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.
இந்து சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ், சமீபத்தில் ஓய்வு பெற்ற மருத்துவரும், கடந்த 35 ஆண்டுகளாக பிபிபியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவருமான தனது தந்தை ஓம் பிரகாஷின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) சீட்டில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.