தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்துள்ள 10 நாடுகளின் பட்டியல் வெளியீடு!

#prices #world_news #Lanka4 #Gold #lanka4Media #lanka4.com
Mayoorikka
11 months ago
தங்கத்தை அதிகம்  கையிருப்பில் வைத்துள்ள 10 நாடுகளின் பட்டியல் வெளியீடு!

உலகளவில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

 ஒரு நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்பில் அடிப்படையிலேயே அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கணிக்கப்படுகிறது.

 அதன் பிரகாரம் அதிகளவான கையிருப்பில் தங்கத்தை வைத்திருக்கும் நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மை உடைய நாடாகவும்,குறைந்த கையிருப்பை உடைய நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மை குறைந்த நாடாகவும் கருதப்படுகிறது.

 அந்தவகையில் இந்த ஆண்டின் இறுதியை எட்டியுள்ள நிலையில் உலகில் தங்கத்தின் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் வரிசைப்பப்படுத்தப்பட்டுள்ளன.

 அந்த வரிசையில் அதிகளவான தங்க இருப்பை கொண்டுள்ள முதல் 10 நாடுகள் எவை என்பதைக் காண்போம். தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் நாடு அமெரிக்கா, உலகிலேயே அதிகபட்சமாக 8,133 தொன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்திருக்கிறது.

images/content-image/2023/12/1703669494.jpg

 தங்கம் கையிருப்பில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி 2-வது இடத்தில் உள்ளது.

 அந்த நாட்டிடம் 3,352 தொன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இத்தாலி 2,451 தொன் தங்கத்தை கஜானாவில் வைத்துள்ளது.

 ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸிடம் 2,436 தொன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. மதிப்புமிகு மஞ்சள் உலோகம் இருப்பின் அடிப்படையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

 அந்நாட்டிடம் 2,329 தொன் தங்கம் உள்ளது. ஆறாவது இடத்தை 2,113 தொன் தங்க சேமிப்புடன் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. 1,040 தொன் உடன் சுவிட்சர்லாந்து 7-வது இடத்தில் உள்ளது.

 எட்டாம் இடத்தில் ஜப்பான் 846 தொன் தங்கம் உள்ளது. இந்தியாவிடம் 797 தொன் தங்கம் கையிருப்பில் இருப்பதனால் அதிகம் தங்கம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 9 இடத்தை இந்தியா பிடித்துள்ளது. பத்தாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. அந்நாட்டிடம் 612 தொன் அளவு தங்கம் கையிருப்பில் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!