போர் நிறுத்தத்திற்கான மூன்று வழிகளை தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர்

#Prime Minister #Israel #War #Tamilnews #Hamas #Netanyahu #ceasefire #lanka4_news #lanka4.com #Lanka4worldnews
Prasu
11 months ago
போர் நிறுத்தத்திற்கான மூன்று வழிகளை தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர்

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே கிறிஸ்துமஸ் தினத்தின்போது காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் பல குடும்பங்கள் கொல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும். காசாவில் உள்ள ஆயுதக்குழுக்களை அழிக்க வேண்டும். பாலஸ்தீன சமூகத்தில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும். இந்த மூன்றும் நிறைவேறும் வரை காசாவில் போர் நிறுத்தம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!