20204 இல் போட்டியிடும் ட்ரம்ப்!
2024 ஆம் ஆண்டு இடம்பெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அமெரிக்க கீழ் நீதிமன்றம் தடை விதித்த போதிலும், அந்த தடையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனையடுத்து அவர், மிச்சிகன் மாநிலத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களுக்கான பேச்சு சுதந்திரம் என்ற குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் 3வது பிரிவை டிரம்ப் மீறியதாக வாதிட்டது.
இது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக "கிளர்ச்சியில் ஈடுபடும்" எவருக்கும் கூட்டாட்சி அல்லது மாநில பதவியை வகிக்க தடை விதிக்கிறது.
இருப்பினும், முன்னாள் கூட்டமைப்பு அதிகாரிகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு இயற்றப்பட்ட 14வது திருத்தத்தின் குழுவின் விளக்கத்தை மிச்சிகன் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.