OpenAI மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த பிரபல பத்திரிகை
#America
#world_news
#Social Media
#company
#Case
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
Prasu
11 months ago
சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு சேவையை உருவாக்கிய ஒபன்ஏ.ஐ. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இரு நிறுவனங்களும் தங்களின் லட்சக்கணக்கான செய்திகளை எவ்வித அனுமதியும் இன்றி பயிற்சிக்காக பயன்படுத்தி இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
தங்களது ஏ.ஐ. சாட்பாட் கொண்டு நிறுவனங்கள் நியூயார்க் டைம்ஸ்-இன் முதலீடுகளில் இருந்து இலவசமாக பயன்பெற நினைப்பதாக மேலும் தெரிவித்துள்ளது.
ஊடகத்துறையில் நியூயார்க் டைம்ஸ் செய்துள்ள முதலீடுகளை எவ்வித அனுமதியோ அல்லது கட்டணமோ செலுத்தாமல் இரு நிறுவனங்களும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பதாக நியூயார்க் டைம்ஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.