இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த தென்னாப்ரிக்கா

#International #Israel #War #SouthAfrica #Case #Court #Hamas #lanka4Media #lanka4_news #lanka4.com
Prasu
10 months ago
இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவு செய்த தென்னாப்ரிக்கா

இஸ்ரேல் மீது இனப்பேரழிவு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள தென்னாப்ரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கினை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. 

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 21,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அளித்த விண்ணப்பத்தில், 'காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை' என தென் ஆப்பிரிக்கா விவரித்துள்ளது.

மேலும், 'காஸாவில் பலஸ்தீனியர்களைக் கொல்வது, அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக தீங்கு விளைவிப்பது மற்றும் அவர்களின் உடல் ரீதியான அழிவைக் கொண்டு வருவதற்காக கணக்கிடப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை அவர்கள் மீது சுமத்துவது ஆகியவை கேள்விக்குரிய செயல்களில் அடங்கும்' என கூறப்படுகிறது.

 பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறிக்கு சமம் என பல மனித உரிமை அமைப்புகள் சாடியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!