சீனாவில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம்

#China #government #Employees #Law #Tamilnews #lanka4Media #lanka4.com #Bribery
Prasu
10 months ago
சீனாவில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம்

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை தரும் வகையில் சீனாவில் புதிதாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், தனிப்பட்டநேர்மையை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்களைத் தண்டிக்க சீனா தனது குற்றவியல் சட்டத்தை நேற்று திருத்தியது.

மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திருத்தப்பட்ட சட்டம், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பல நபர்களுக்கு, அல்லது முக்கிய தேசிய திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு மீண்டும் மீண்டும் லஞ்சம் வழங்குபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இச்சட்டப்படி, நிர்வாகம், நீதித்துறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் நிதி, சுகாதாரம், உணவு, கல்வி போன்ற துறைகளில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது. 

இந்த புதிய குற்றவியல் சட்டத் திருத்தம் சீனாவின் உயர்மட்ட சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிலைக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. 

இவர் அதிபராக பதவியேற்ற 2012ம் ஆண்டு முதல், ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில், கட்சி நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், கட்சி நிர்வாகிகளின் உறவினர்கள் பெயர்கள், ஊழல் விவகாரத்தில் அடிபடக்கூடாது என்று எச்சரித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!