வங்காள தேசத்தில் நோபல் பரிசு வென்றவருக்கு 6 மாத சிறை தண்டனை

#Arrest #Court Order #Prison #Bangladesh #money #Nobel #Prize #lanka4Media #lanka4.com
Prasu
10 months ago
வங்காள தேசத்தில் நோபல் பரிசு வென்றவருக்கு 6 மாத சிறை தண்டனை

வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) என்பவர், 1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.

2022 ஜனவரி மாத காலகட்டத்தில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கியால் பயனடைந்தனர்.

 தற்போது 83 வயதாகும் முகமது யூனுஸ், வங்காள தேசத்தில் லாப நோக்கமற்ற (not-for-profit) சேவை உணர்வோடு கிராமின் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக யூனுஸ் மற்றும் 3 பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அந்நாட்டின் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 2023 ஆகஸ்ட் மாதம் உலகளாவிய பிரபலங்கள் 170 பேர் பேராசிரியர் யூனுஸ் மீதான சட்டரீதியான தாக்குதலை நிறுத்துமாறு வங்காள தேச பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

 விசாரணை நிறைவுற்ற நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பேராசிரியர் முகமது யூனுஸ் மற்றும் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 6 மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!