இல் து பிரான்ஸின் தொடருந்து நிலையங்களுக்கு பயணிக்க புதிய பேருந்து சேவைகள் அறிமுகம்

#France #Bus #Train #service #சேவை #புதுவருடம் #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
8 months ago
இல் து பிரான்ஸின் தொடருந்து நிலையங்களுக்கு பயணிக்க புதிய பேருந்து சேவைகள் அறிமுகம்

இல் து பிரான்சுக்குள் புதிதாக ஐந்து இரவுநேர பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Noctilien என அழைக்கப்படும் இந்த பேருந்து சேவைகள், இல் து பிரான்சுக்குள் உள்ள தொடருந்து நிலையங்களுக்கிடையே பயணிக்கும் இரவுநேர சேவைகளாகும்.

 123, 147, 160, 162 மற்றும் 161 ஆகிய இலக்கங்கள் கொண்ட இந்த புதிய சேவை, Yvelines, Val-d'Oise மற்றும் Essonne ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

images/content-image/1704270085.jpg

 இரவு நேர பயணங்கள் அதிகரித்துள்ள நிலையில், தேவைகருதி மேலதிகமான ஐந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Île-de-France Mobilités தெரிவித்துள்ளது. இல் து பிரான்சுக்குள் இரவு நேர பேருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 30% சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.