தீபாவளியை முன்னிட்டு காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை – நோர்வூட்டில் திடீர் சோதனை!

#SriLanka #Health #Food #LANKA4 #Office #DIwali
Mahathi
2 hours ago
தீபாவளியை முன்னிட்டு காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை – நோர்வூட்டில் திடீர் சோதனை!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் நகரில் அமைந்துள்ள உணவகங்கள், மரக்கறிக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பழுதடைந்த மரக்கறிகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'கோலி சோடா' குளிர்பானத்தின் விற்பனை மற்றும் கையிருப்பு தொடர்பிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், உணவுப் பொருட்களைச் சுகாதாரமற்ற முறையில் கையாளுதல், முறையற்ற வகையில் சேமித்து வைத்தல் உள்ளிட்ட சுகாதார விதிமீறல்கள் தொடர்பிலும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது, சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் அவற்றின் காலாவதித் திகதி மற்றும் தரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!