கிரிக்கெட் பேட் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்த தேர்தல் ஆணையம்

#Arrest #Pakistan #ImranKhan #Election Commission #parties #lanka4Media #lanka4.com
Prasu
10 months ago
கிரிக்கெட் பேட் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்த தேர்தல் ஆணையம்

பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாய் கட்சி தலைவரான இம்ரான் கான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். 

அந்த 2 மனுக்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் இம்ரான் கான் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி அக்கட்சி சின்னமான கிரிக்கெட் பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

தெக்ரிக்-இ-இன்சாப்பின் உட்கட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகளை மீறியதாக சின்னத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து பெஷாவர் ஐகோர்ட்டில் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி வழக்கு தொடர்ந்து உள்ளது.

இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது. கோர்ட்டின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. 

அதில் தீர்ப்பளித்த கோர்ட்டு, கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது. தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவு பிராந்திய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!