உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்
ஐகோன் ஒப் தி சீஸ் (Icon of the seas) எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தமது முதலாவது பயணிகளை வரவேற்பதற்கு தயாராகி வருகின்றது.
2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பல் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico) பிரதேச துறைமுகத்தில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக நங்கூரம் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1,198 அடி நீளமும் 250,800 டொன் எடையும் கொண்ட இந்த கப்பல் ஒரு சொகுசு கப்பலாகும். 20 அடுக்குகள் கொண்ட இந்த கப்பல் உலக புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரமாண்டமான சாப்பாட்டு அரை, ஆறு நீச்சல் குளங்கள் மற்றும் உலகின் எந்தவொரு கப்பலிலும் இல்லாத வகையிலான கடல் நீர் பூங்கா ஆகியவற்றை இந்தக் கப்பல் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரில் இருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.