தாயிடமிருந்து பிரிந்த 4 மாதங்களே ஆன யானை குட்டி மீட்கப்பட்டு தாயுடன் சேர்ப்பு

#India #Tamil Nadu #TamilCinema #Tamil #Tamilnews
Lanka4
1 year ago
தாயிடமிருந்து பிரிந்த  4 மாதங்களே ஆன யானை குட்டி மீட்கப்பட்டு தாயுடன் சேர்ப்பு

images/content-image/1704443263.jpg

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள பன்னி மேடு எஸ்டேட் பகுதியில் சுமார் 4 முதல் 5 மாதங்களே ஆன யானை குட்டி ஒன்று தாயிடமிருந்து பிரிந்து சுற்றி திரிந்தது. இது குறித்து வளத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ட்ரோன் உதவி மூலம் வனத்துறையினர் குட்டியின் தாயை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.பின்பு குட்டியானை இருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் யானை குட்டியின் தாய் கண்டறியப்பட்டது. தொடர்ந்து யானை குட்டியை அதன் தாயுடன் இணைக்கும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.பின்பு பத்திரமாக தாயும் சேயும் ஒன்றிணைக்கப்பட்டது. வனத்துறையினர் நான்கு குழுக்கள் அமைத்து தாயையும் குட்டியானையும் கண்காணித்து வருகின்றனர்.

images/content-image/1704443185.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
https://youtu.be/2RPWpWfSzRw
https://youtu.be/wjeVy4hSGLU