சிட்னியின் ஓர் பகுதியை தமிழீழம் என்ற பெயர் சூட்ட முயற்சி - அன்னைமொழி அன்புவழி அமைப்பு
சிட்னியில் தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு பகுதிக்கு தமிழீழம் என்ற பெயர் சூட்டும் முயற்சியை அன்னைமொழி அன்புவழி அமைப்பின் அகிலஉலக தமிழ் முழக்கக் களம் செய்ய முழு முனைப்புடன் களம் இறங்கியுள்ளது .
இது ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழர்கள் புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய நாடுகளிலும் முறையாக விண்ணப்பிக்கப்பட்டு அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இடங்களில் அன்புவழியில் தமிழீழம் என்ற பெயர் கொண்டுவரப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும் என்பது என்னுடைய அன்பு வேண்டுகோள்.
வையம் முழுவதும் தமிழீழம் மலரட்டும் இந்த நற்காரியத்திற்கு உறுதுணையாக செயற்படவிரும்பும் சிட்னி வாழ் தமிழ் ஆர்வலர்கள் முகப்பு புத்தகத்தின் உட்ச்செய்தி வழி தொடர்புகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் .
கண்ணீர் சிந்திய சாமானிய சனம் பேராறுதல் பெறட்டும் !
உயிர் துறந்த அப்பாவி மக்கள் ஆத்மசாந்தி அடையட்டும் !
புலம்பெயர்ந்த தமிழர்களின் மனம் பெருநிம்மதியில் பொங்கட்டும் !
இஃதே தமிழர் திருநாளுக்கான பொங்கலுக்கான எங்கள் நற்செய்தி
அன்புடன் Dr.மாலினி ஆனந்தகிருஷ்ணன் ( முனைவர் பச்சைவதி )
நிறுவனர்
அன்னைமொழி அன்புவழி அமைப்பு
அகில உலக தமிழ் முழக்கக் களம் !
ஆஸ்திரேலியா-சிட்னி