தென்கொரியா மீது திடீர் பீரங்கி தாக்குதல் நடத்திய வடகொரியா
#Attack
#NorthKorea
#Missile
#Warning
#SouthKorea
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
Prasu
10 months ago
வடகொரியா-தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தென் கொரியாவின் யோன் பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை பீரங்கி மூலம் குண்டுகளை வீசி வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தியது.
200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன் பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல்பகுதியில் விழுந்தன.
தாக்குதலையடுத்து தீவுப் பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பீரங்கி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை தென்கொரியா அதிகரித்து உள்ளது.