மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறியுள்ள காஸா - சுட்டிக்காட்டிய ஐ.நா!
பொதுமக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக காஸா பகுதி மாறிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பகுதியிலுள்ள மக்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் தொடர்ந்தும் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இஸ்ரேல் - காஸா மோதல் காரணமாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதுடன் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளது கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தொற்று நோய்கள் அதிகளவில் பரவி வருவதுடன் , மருந்து பொருள்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார்.
மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்துள்ள நிலையில் உடனடி போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.